மணப்பெண் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிடுவதாகக் கூறி திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்

உத்தரப்பிரதேசத்தில் மணப்பெண் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிடுவதாகக் கூறி மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-09-10 02:30 GMT
உத்தரப்பிரதேசத்தில் மணப்பெண் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிடுவதாகக் கூறி மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்ரோகா AMROHA மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உரோஜ் மெகந்தி என்பவரின் மகளுக்கும், கோமர் ஹைதர் என்பவரின் மகனுக்கும் கடந்த 5ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், திருமணத்தன்று மணமகன் வீட்டார் வராமல் தாமதப்படுத்தியதால் மணமகள் வீட்டார் பதற்றமடைந்தனர். இது குறித்து மணமகனின் தந்தையிடம் அவர்கள் கேட்டபோது, மணமகள் நீண்ட நேரம் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருவதால் இந்த திருமணத்தை நிறுத்துவதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் போலீசில் புகாரளித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்