விமான பயண விதிமுறைகள்...
விமான பயணத்தில் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை சிவில் விமான போக்குவரத்து துறை 2017ம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
விமான பயணத்தில், பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை சிவில் விமான போக்குவரத்து துறை 2017ம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதன்படி விமானத்தில் மற்ற பயணிகளுக்கு தடை ஏற்படுத்தும் விதமாகவோ, சட்டத்துக்கு முரணாகவோ நடப்பதும், விமான ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பதும் குற்றமாகும். தடை ஏற்படுத்துதல் மற்றும் சட்டத்துக்கு முரணாக செயல்படுவதன் மூலம் விமானம் அதில் பயணம் செய்யும் பயணிகள் அவர்களின் உடைமைகளுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடும். விமான பயணத்தின் போது முறைகேடாக நடப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும் இதுபோன்ற பயணிகளால் விமான பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாகவும் சிவில் விமான போக்குவரத்து துறையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.