அரசியல் கட்சி தலைவர்களின் பெயரில் தேங்காய் : வியாபாரியின் விநோத முயற்சி

ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் நகரில் மக்களை கவரும் முயற்சியில் தேங்காய் வியாபாரி ஈடுபட்டுள்ளார்.

Update: 2018-08-25 09:30 GMT
ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் நகரில் மக்களை கவரும் முயற்சியில் தேங்காய் வியாபாரி ஈடுபட்டுள்ளார். தேங்காய் கடை நடத்தி வரும் இவர், தனது கடையில் உள்ள தேங்காய்களை அரசியல் கட்சி தலைவர்களின் பெயரில் மூன்று பிரிவாக விலை நிர்ணயம் செய்துள்ளார்.இதில் ராஜஸ்தானின் முதலமைச்சர் வசுந்தராவின் பெயரிடப்பட்டுள்ள தேங்காய் 30 ரூபாய்க்கும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் அஜ்மீரின் சட்டமன்ற உறுப்பினர் சச்சின் பைலட் ஆகியோரின் பெயரில் தலா 25 ரூபாய் மற்றும் 20 ரூபாய்க்கு தேங்காய்களை வரிசைப்படுத்தி விற்பனை செய்கிறார்.
Tags:    

மேலும் செய்திகள்