பாரத் ஸ்டேட் வங்கி : நடப்பு நிதியாண்டில் ரூ.4876 கோடி நஷ்டம்

இந்தியாவின் மிகப் பெரிய அரசு வங்கியானபாரத் ஸ்டேட் வங்கி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 4 ஆயிரத்து 876 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

Update: 2018-08-13 11:22 GMT
* இந்தியாவின் மிகப் பெரிய அரசு வங்கியானபாரத் ஸ்டேட் வங்கி, நடப்பு நிதியாண்டின்முதல் காலாண்டில் 4 ஆயிரத்து 876 கோடி 
ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.இது தொடர்பாக அந்த வங்கி வெளியிட்டுள்ள காலாண்டு நிதி அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் நஷ்டம் 4 ஆயிரத்து 876 கோடி ரூபாயை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.


* மொத்த கடன்களில் வாராக்கடன்களின் விகிதம் 10 புள்ளி 69 சதவீதமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடன் பத்திரங்கள் வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்பினாலும், ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பணிக்கொடை அதிகரிப்பாலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.


* நிகர வாராக்கடன்களின் அளவு கடந்த ஜூன் 30ஆம் தேதி, 99 ஆயிரத்து 236 கோடி ரூபாயாக உள்ளதாகவும்,முதல் காலாண்டின் மொத்த வருமானம்  65 ஆயிரத்து 492 கோடி ரூபாயாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


* கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், 2006 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய பாரத ஸ்டேட் வங்கி, அதன் பிறகு, தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொருளாதார வளர்ச்சி வேகமாக இருந்தபோது அளிக்கப்பட்ட பெரும் கடன்கள், பிறகு மந்த காலத்தில், வாராக் கடன்களாக மாறி, வங்கியை நஷ்டத்தில் தள்ளியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
Tags:    

மேலும் செய்திகள்