மாணவர்கள் தற்கொலையில் தென்னிந்திய மாநிலங்களில் தமிழகம் முதல் இடம்...
நாடு முழுவதும் கடந்த 2015ஆம் ஆண்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் 8 ஆயிரத்து 934 பேர் தற்கொலை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மாணவர் தற்கொலை - தமிழகம் முதலிடம்
சமூக மூலதனம் மற்றும் காவல் துறை செயல்பாடுகளில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக, அறிக்கை வெளியாகி உள்ளது. பெங்களூரை சேர்ந்த பொது விவகாரங்களுக்கான மையம், மாநில அரசுகளின் செயல்பாடுகள் பற்றிய ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், சமூக மூலதனம், காவல் துறை செயல்பாடு, வன்கொடுமை தடுப்பு, கடும் குற்றங்கள் குறைப்பு, குழந்தைகள் நலன் மேம்பாட்டுக்கான கட்டமைப்பு ஆகிய பிரிவுகளில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி வசதிகள், நீதி வழங்கல், வனப்பரப்பு மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தயாரிப்பு, கழிவு மேலாண்மை, நிலையான வேளாண்மை மற்றும் நீர் ஆதார மேலாண்மை,, மருத்துவ வசதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பாதுகாப்பு, மாசு கட்டுப்பாடு ஆகிய துறைகளில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 2015ஆம் ஆண்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் 8 ஆயிரத்து 934 பேர் தற்கொலை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக, மக்களவையில் கடந்த மாதம் 30-ஆம் தேதி உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் உபேந்திர குஸ்வாகா எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். இதில், கடந்த 2015ஆம் ஆண்டு, தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்சமாக, தமிழகத்தில் 955 மாணவர்கள் தற்கொலை செய்திருப்பதாக குறிப்பிட்டார்.
ஆந்திராவில் 360 மாணவர்களும், கேரளாவில் 374 பேரும், தெலங்கானாவில் 491 பேரும், கர்நாடகாவில் 597 பேரும் மற்றும் புதுச்சேரியில் 17 பேரும் அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக, அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியாவில் அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆயிரத்து 230 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாகக் தெரிவித்தார். தற்கொலை செய்தவர்களில், 18 வயதிற்கு குறைவானவர்கள் ஆயிரத்து 360 பேரும், 30 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆயிரத்து 183 பேரும் உள்ளதாகவும் அவர் கூறினார். தற்கொலைக்கு தேர்வில் தோல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.