மொபைல் போன்களில் ஆதார் உதவி எண் -தகவல்கள் திருடப்படாது என விளக்கம்

செல்போன்களில் உள்ள ஆதார் உதவி எண் மூலம், தகவல்கள் எதுவும் திருடப்படாது என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

Update: 2018-08-06 07:38 GMT
சமீப காலங்களில் வாங்கப்பட்ட பல ஆன்டிராய்ட் போன்களில், ஆதார் மைய உதவி எண் என்ற பெயரில் 11 இலக்க எண், ஏற்கனவே சேமிக்கப்பட்டுள்ளது. அந்த எண் மூலம் செல்போன்களில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்பிருப்பதாக பலர் புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், மக்களின் பயன்பாட்டிற்காக ஆதார் உதவி எண்ணை ஆன்டிராய்டு செல்போன்களில் சேர்த்தது தாங்கள் தான் எனக்கூறி கூகுள் நிறவனம் மன்னிப்பு கோரியது.இதை அடுத்து, உதவி எண் குறித்து ஆதார் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. 'இது ஒரு உதவி எண் தான் எனவும் இதன் மூலம்,  செல்போன்களில் இருந்து எந்த தகவல்களையும் திருட முடியாது எனவும்' ஆதார் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதனால் இந்த நம்பரை அழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றும் ஆதார் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்