பிளாஸ்டிக் தடை - குளிர்பான நிறுவனங்கள் புதிய வியூகம்

காலியான குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்பி கொடுத்தால், விலைக்கு வாங்கி கொள்வதாக குளிர்பான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Update: 2018-07-21 06:41 GMT
காலியான குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்பி கொடுத்தால், விலைக்கு வாங்கி கொள்வதாக குளிர்பான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மகாராஸ்டிரா மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,  அங்கு குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்களில், அவை என்ன விலைக்கு திரும்ப பெற்று கொள்ளப்படும் என்று அந்த நிறுவனங்கள் அச்சடிக்க தொடங்கியுள்ளன. அதில், ஒரு கிலோ பிளாஸ்டிக் பாட்டில்கள் 15 ரூபாய்க்கும், பிளாஸ்டிக் பாட்டில் நொறுக்கப்பட்டிருந்தால் ஒரு கிலோ 5 ரூபாய்க்கு எடுத்து கொள்ளப்படும் என அச்சிடப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்