வருமான வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு..
குறிப்பிட்ட தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்யவில்லை என்றால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
2018-19 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31-ந் தேதி கடைசி நாள்.
வருமானவரி சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 234F பிரிவின் படி, ஜூலை 31-ஆம் தேதிக்குள் வருமான வரியை செலுத்தாதவர்களிடம் தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
5 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ளவர்கள், வருமானவரி கணக்கை ஜூலை 31-க்கு பிறகு 2019 மார்ச் மாதத்திற்குள் தாக்கல் செய்தால், அவர்களிடம் இருந்து ஆயிரம் ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஆண்டு வருமானம் உடையவர்கள், ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகு, டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யும் போது அவர்களிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும்.
டிசம்பர் 31-ஆம் தேதி வரை வருமான வரியை தாக்கல் செய்யாதவர்கள், அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும் போது, அவர்களிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும்.
மேலும், மதிப்பீட்டு ஆண்டு 2018-19 என இருப்பின், 31.03.2019-க்கு பிறகு வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.