அடையாளத்தை இழக்கிறதா குடும்ப அட்டை...?

குடும்ப அட்டைகள் தான் பிரதான அடையாளமாக இருந்த நிலை மாறி, தற்போது குடும்ப அட்டைகள் தனது அடையாளத்தை இழக்க துவங்கியுள்ளன.

Update: 2018-07-12 12:04 GMT
"குடும்ப அட்டைகள் முகவரி சான்று அல்ல..."

குடும்ப அட்டை ஒரு முக்கியமான அடையாளமாக இருந்து காலம் மாறி, தற்போது குடும்ப அட்டைகள் மெல்ல மெல்ல தனது அடையாளத்தை இழந்து வருகிறது. தற்போது குடும்ப அட்டைகள்  ஒரு அடையாளமாக பெரும்பாலான இடங்களில் ஏற்று கொள்ளப்படுவதில்லை.. ஆதார் வந்த பிறகு குடும்ப அட்டை, வெறும் ரேஷனில் பொருள் வாங்கும் அட்டையாக மட்டுமே உள்ளது. அதே சமயம், சில இடங்களில் ஆதாரும் ஒரு அடையாளமாக எடுத்து கொள்ளப்படுவதில்லை. உண்மையில், மக்களுக்கான அடையாளம் எது  என்ற குழப்பம் தற்போது எழுந்துள்ளது. வங்கியில் கணக்கு தொடங்க, ஆதார், பான் கார்ட் இருந்தால் போதும்,  குடும்ப அட்டை ஒரு அடையாளமாக கூட எடுத்து கொள்ளப்படுவதில்லை. பான் அட்டை வாங்க, ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்றவை எடுத்து கொள்ளப்படுகிறது. குடும்ப அட்டை எடுத்து கொள்ளப்படுவதில்லை. பாஸ்போர்ட் வாங்க, முன்பெல்லாம், 3 அடையாள அட்டைகள் வேண்டும், மூன்றிலும் ஒரே மாதிரி பெயர், முகவரி இருக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால் தற்போது ஆதார் மட்டும் இருந்தால் போதும். சமையல் எரிவாயு இணைப்பு பெற, குடும்ப அட்டை எடுத்து கொள்ளப்படுகிறது, ஆனால்,சமையல் எரிவாயு இணைப்பு பெற,வாடகை வீட்டின் ஒப்பந்தம் இருந்தாலே போதுமானது. இதன் படி, வாடகை வீட்டின் ஒப்பந்தத்திற்கான மதிப்பு தான் குடும்ப அட்டைக்கும் என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.

அதே சமயம்  டோல் கேட் போன்ற  இடங்களில் ஆண்டு சந்தா செலுத்த,  ஆதார் அட்டையும் எடுத்து கொள்ளப்படுவதில்லை, அதற்கு  பதிலாக பாஸ்போர்ட், ரேஷன் அட்டை தான் வேண்டும் என்கின்றனர் மிகுந்த கண்டிப்புடன். ஆனால் ரேஷன் அட்டையில், முகவரியின் உண்மை தன்மைக்கு இது சான்று அல்ல என்று தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது.  இதனால் தற்போது, மக்களுக்கான உண்மையான அடையாளம் எது என்ற குழப்பம் எழுந்திருக்கிறது. இன்றும் கிராம புறங்களில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டைகள் தான் பிரதான அடையாளம். உண்மையில், ரேஷன் அட்டை தனது அடையாளத்தை முழுவதுமாய் இழந்து வருகிறது. குடும்ப அட்டைகள் அடையாளமா அல்லது உணவுப் பொருள் வாங்க ஒரு ஆவணம் மட்டுமா என்ற குழப்பம் மக்களிடயே மேலோங்கியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்