அசாமில் வெளி மாநில மீன் விற்பனைக்கு தடை
அசாமில் மீன்களை பதப்படுத்த பார்மலின் ரசாயனம் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள மீன் மார்க்கெட்டில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, ஆந்திரா உள்ளிட்ட சில வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்களில், பார்மலின் ரசாயனம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. புற்றுநோயை உண்டாக்கும் இந்த ரசாயனம், இறந்த உடல்களை பதப்படுத்த பயன்படுத்துவதாகும். இதனால், வெளிமாநிலங்களில் இருந்து மீன்களை கொண்டு வந்து விற்பனை செய்வதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை 10 நாட்களுக்கு அமலில் இருக்கும் எனவும் மீறினால் 7 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அசாம் சுகாதாரத்துறை அமைச்சர் பியுஸ் ஹசாரிங்கா தெரிவித்துள்ளார்.