வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு துன்புறுத்தல் - செல்போன் மூலம் முத்தலாக் கொடுத்த கணவன்
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உணவு, தண்ணீர் கொடுக்காமல் அறையில் அடைத்து வைத்து கணவனால் கொடுமைப்படுத்தப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பரேலி பகுதியைச் சேர்ந்த ராஷியா என்ற இஸ்லாமிய பெண்ணுக்கு 6 வயதில் குழந்தை உள்ளது. கணவனால் வரதட்சணை கொடுமைக்கு ஆளான அந்தப் பெண்ணுக்கு, போன் மூலம் முத்தலாக் கூறி கணவன் விவாகரத்து செய்தார்.இதற்கிடையே, ராஷியாவை, ஒரு அறையில் பூட்டி வைத்து, உணவு, தண்ணீர் எதுவும் கொடுக்காமல் ஒரு மாதத்துக்கும் மேலாக கணவன் துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் உறவினர் மூலம் தகவலறிந்து மீட்கப்பட்ட அந்த பெண்ணுக்கு, லக்னோவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளி்க்கப்பட்டது.உடல் மிகவும் நலிவுற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தலாக் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், செல்போன் மூலம் முத்தலாக் கொடுத்து மனைவியை துன்புறுத்திய கணவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.