இந்திய சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை -கோபால் ஷெட்டி
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை என பா.ஜ.க. எம்.பி ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
* இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை என பா.ஜ.க. எம்.பி ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
* மகாராஷ்டிர மாநிலம், மால்வானி என்ற இடத்தில் ஷியா கப்ரஸ்தான் கமிட்டி சார்பில் மிலாது நபி விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற வடக்கு மும்பை தொகுதி பா.ஜ.க. எம்.பி கோபால் ஷெட்டி, இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் மட்டுமே பங்கிருப்பதாக குறிப்பிட்டார்.
* கிறிஸ்தவர்கள் ஆங்கிலேயர்கள் என்றும், அவர்கள் அந்நியர்கள் என்றும் பா.ஜ.க. எம்.பி குறிப்பிட்டார். இந்த பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
* இது குறித்து விளக்கம் அளித்துள்ள கோபால் ஷெட்டி, தமது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், கட்சி தலைமையிடம் விளக்கம் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.