"பெட்ரோல், டீசல் வரியை குறைக்க முடியாது" - மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி
தேர்தல் காலத்தில், நிதி பற்றாக்குறையில் சிக்க முடியாது
மும்பையில், பாரத ஸ்டேட் வங்கி நடத்திய கூட்டத்தில், வீடியோ கான்பிரென்சிங் மூலம் கலந்து கொண்ட அவர், தேர்தல் வரக்கூடிய காலத்தில், பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து, நிதி பற்றாக்குறையை அதிகரித்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து இப்படியே இருக்காது என்றும், அதன் விலை குறையும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அவசர அவசரமாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு குறித்து பேசிய அவர், 2015ம் ஆண்டு சீனா, தனது கரண்சியின் மதிப்பில் மாற்றத்தை கொண்டு வந்த போதும்,இந்திய ரூபாயில் மாற்றம் இருந்தது. ஆனால் அது சில வாரங்களில் சரியானது, அதே போல் தான் தற்போதைய நிலையும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.