இந்தியாவில் கார்கள் விற்பனை 30% அதிகரிப்பு

இந்தியாவில், கார்கள் மற்றும் கனரக வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன

Update: 2018-07-02 11:23 GMT
இந்தியாவில், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சரக்குகளை கொண்டு செல்லும் நடைமுறை எளிதாகியுள்ளதால்,  கார்களின் ஜூன் மாத விற்பனை, கடந்த ஆண்டை காட்டிலும் 30 சதவிதமும், கனரக வாகனங்களில் விற்பனை 40 சதவிதமும் அதிகரித்துள்ளது.  இது கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இதே ஆண்டில், கடந்த மே மாதம்,  கார்களின் விற்பனை 20 சதவிதம் அதிகரித்திருந்தது, ஜூன் மாதத்தில் இது மேலும் அதிகரித்துள்ளது.   வாகனங்களில் தேவை அதிகரித்தது ஒரு காரணமாக கூறப்பட்டாலும், தேவைக்கு தகுந்தாற் போல், வாகனங்களை கொண்டு செலவதற்கான நடைமுறை எளிதாகியுள்ளது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்