காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்டியது வரலாற்று சிறப்புமிக்க தருணம் - ஆணையத் தலைவர் மசூத் உசேன்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் சுமூகமாக நடைபெற்றது என ஆணையத் தலைவர் மசூத் உசேன் கூறியுள்ளார்

Update: 2018-07-02 11:00 GMT
"காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்டியது வரலாற்று சிறப்புமிக்க தருணம்"

உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி அமைக்கப்பட்டு உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், டெல்லி ஆர்.கே.புரத்தில் உள்ள மத்திய நீர்வள ஆணைய தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

அதன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் காலையில் தொடங்கிய கூட்டம் பிற்பகல் 3 மணி வரை நீடித்தது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் பிரதிநிதிகளாக மத்திய நீர் வளம் மற்றும் வேளாண் துறையை சேர்ந்த 4 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதுபோல, தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். 

கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆணைய தலைவர் மசூத் உசேன், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஜூலை மாதம் தர வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதில்,

* காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்டியது வரலாற்று சிறப்புமிக்க தருணம்

* ஜூன் மாதத்தில் திறந்துவிடப்பட்ட உபரி நீரை கர்நாடகா கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்

* ஜூலை மாதத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா வழங்க வேண்டும்

* காவிரி ஒழுங்காற்று ஆணையக் கூட்டம் ஜூலை 5ம் தேதி நடைபெறும்

* கா​விரி நதிநீர் பங்கீட்டில் நான்கு மாநிலங்களும் உரிய ஒத்துழைப்பு வழங்கும் என நம்புகிறேன்

* கர்நாடகா உச்சநீதிமன்றத்தை நாடுவது குறித்து கருத்துக் கூற முடியாது

* காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் சுமூகமாக நடைபெற்றது என கூறியுள்ளார்.







Tags:    

மேலும் செய்திகள்