4 ஆண்டுகளில் 40 ராக்கெட் தயாரிக்க மத்திய அரசு ரூ.10,600 கோடி வழங்கியுள்ளது - இஸ்ரோ தலைவர் சிவன்
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்திய செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
"40 ராக்கெட் தயாரிக்க ரூ.10600 கோடி"
4 ஆண்டுகளில் 40 ராக்கெட் தயாரிக்க மத்திய அரசு ரூ.10,600 கோடி வழங்கியுள்ளது. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்திய செயற்கைக்கோள், அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும். இந்தாண்டு இறுதியில் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும். சந்திராயன் இரண்டில் அனுப்பப்படும் ரோபா, மனிதர்களைப் போல் விண்ணில் இறங்கி ஆராய்ச்சி மேற்கொள்ளும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.