தமிழகம் முழுவதும் காவலர்களின் ரத்த தான முகாம் நடைபெற்று வருகிறது
தமிழகம் முழுவதும் காவலர்கள் ரத்ததான முகாம்
திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் ரத்த தான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த மாவட்டத்தில் பணிபுரியும் 363 காவலர்கள் தன்னார்வத்துடன் முன்வந்து ரத்த தானம் செய்தனர்.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 2 இடங்களில் ரத்த தான முகாம் நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் முகாமில் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் காவலர்களின் ரத்த தான முகாம் நடந்தது. மாநகர காவல் ஆணையர் மனோகரன் முகாமை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, காவலர்கள் ரத்த தானம் செய்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடந்த முகாமில், 80 காவலர்கள் தன்னார்வத்துடன் முன்வந்து ரத்த தானம் செய்தனர்.