தஞ்சாவூர் கலைத்தட்டுக்கு சான்றிதழுடன் தனி முத்திரை
தஞ்சாவூர் கலைத்தட்டிற்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழுடன் தனி முத்திரை வழங்கியுள்ளது.
தஞ்சாவூர் கலைத்தட்டிற்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழுடன் தனி முத்திரை வழங்கியுள்ளது.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த, அறிவுசார் சொத்துரிமை அட்டார்னி சங்க தலைவர் சஞ்சய் காந்தி, இனி மற்ற ஊர்களில் கலைத்தட்டுகள் தயாரித்து, தஞ்சாவூர் கலைத்தட்டு என்ற பெயரில் விற்பனை செய்ய முடியாது என்றார். பதிவு செய்யப்பட்ட புவிசார் குறியீடு பொருட்களை விற்பனை செய்ய கொள்கை முடிவு நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த சஞ்சய்காந்தி, இதனால், தமிழக பொருட்களின் சந்தை மதிப்பு உயரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.