ஆபத்தானதா இ- சிகரெட் ? மருத்துவர்கள் சொல்வது என்ன ?

தமிழகத்தில் இ-சிகரெட்டுக்கு தடை விதிக்க முடிவு ஒரு மாதத்தில் தடை - ஆபத்தானதா இ- சிகரெட் ? மருத்துவர்கள் சொல்வது என்ன ?

Update: 2018-06-24 09:16 GMT
சாதாரண சிகரெட்டின் தோற்றத்தில் நீளமான குழாய். அதற்குள் திரவம் அடங்கிய கேட்ரிட்ஜ் ஒன்று இருக்கும். இந்த கேட்ரிட்ஜை தேவைப்படும்போது வெளியே எடுத்து, அதில் திரவத்தை நிரப்பிக் கொள்ளலாம். உள்ளே போட்டதும் ஆன் செய்வதற்கான பட்டன் ஒன்று இருக்கும். அதை அழுத்தினால் போதும். இ-சிகரெட் கருவிக்குள் இருக்கிற மின் சாதனங்கள் அந்தத் திரவத்தை ஆவியாக்கிவிடும். அதை வாயில் வைத்து உறிஞ்சினால், கேட்ரிட்ஜிலிருந்து நீராவி வெளிவரும்.

500 க்கும் அதிகமான விதவிதமான ஃபிளேவர்களில், குறைந்தபட்சம் 300 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாய் வரை இது விற்கப்படுகிறது. பேனா, யுஎஸ்பி டிரைவ் போன்ற டிசைன்களிலும்கூட இ-சிகரெட்டுகள் கிடைக்கின்றன. வந்த புதிதில் உலகெங்கும் அமோக வரவேற்பைப் பெற்ற இ சிகரெட்டுகள், நாளடைவில் இதன் பாதிப்புகள் தெரியவந்ததால், உலகின் பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. கர்நாடகா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் இதற்குத் தடை இருக்கிறது. மலட்டுத்தன்மை, மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய் ஏற்படும் என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதால், தமிழகத்தில் இ-சிகரெட்டுக்குத் தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இ- சிகரெட்டுகளுக்கான தடையும், பெயர் அளவிற்கு மட்டுமே இல்லாமல் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அதற்கு தடை விதிக்கப்படுவதில் உண்மையான அர்த்தம் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
Tags:    

மேலும் செய்திகள்