தூய்மையான நகரங்கள் : திருச்சிக்கு பின்னடைவு

இந்திய அளவில் தூய்மையான நகரங்களின் பட்டியலில் திருச்சி 13 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது

Update: 2018-06-24 05:20 GMT
தூய்மையான நகரங்கள் : திருச்சிக்கு பின்னடைவு

* "ஸ்வட்ச் சர்வேக்‌ஷன்" என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த தூய்மையான நகரங்களை தேர்ந்தெடுத்து பரிசுகளை அறிவித்து வருகிறது. 

* கடந்த 2016-ம் ஆண்டு திருச்சி மாநகராட்சி, அகில இந்திய அளவிலான தூய்மையான நகரங்களின் பட்டியலில் 3-வது இடத்தையும், கடந்த ஆண்டில்  6-வது இடத்தையும் பிடித்தது.

* நடப்பாண்டில் திருச்சி முதல் இடத்தை பிடிக்கும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் ,தற்போது வெளியாகியுள்ள 500 நகரங்களின் பட்டியலில் திருச்சி 13வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் கோவை  16வது இடத்தில் உள்ளது.

* இந்த பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தை பிடித்த மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், இந்த ஆண்டும் முதலிடத்தில் தொடர்கிறது. 2-வது இடத்தை போபால் நகரமும், 3-ம் இடத்தை சண்டிகரும் பிடித்துள்ளன.

மத்திய அரசு "ஸ்வட்ச் சர்வேக்‌ஷன்" திட்டத்தின் கீழ் தூய்மையான நகரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

* 2016-ம் ஆண்டில் திருச்சிக்கு 3-வது இடம்

* 2017-ம் ஆண்டில் திருச்சிக்கு 6-வது இடம்

* தற்போது 13வது இடத்தில் திருச்சி

* 16வது இடத்தில் கோவை

* முதல் இடம்-இந்தூர்

* இரண்டாவது இடம்-போபால்

Tags:    

மேலும் செய்திகள்