செயல்பாட்டுக்கு வந்தது, காவிரி ஆணையம்
கர்நாடகம் தவிர்த்து, பெயர்கள் அறிவிப்பு
காவிரி ஆணைய விவகாரத்தில், அதிரடி திருப்பம் ஏற்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட போதிலும், கர்நாடக அரசு, தங்கள் மாநில பிரதிநிதி பெயரை அறிவிக்காமல் கால தாமதம் செய்துவருகிறது.
எனவே, பொறுத்து பார்த்த மத்திய அரசு, கர்நாடகம் தவிர்த்து, தங்கள் பிரதிநிதிகளுடன், தமிழகம் உள்ளிட்ட 3 மாநில உறுப்பினர்களின் பெயர்களை இறுதி செய்துள்ளது.
இதன் மூலம், காவிரி ஆணையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே, காவிரி ஆணையத்தின்
தலைமை அலுவலகம் புதுடெல்லியில் இயங்கும். அதேவேளையில், குழுவின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.