உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான செல்லமேஸ்வரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.கடந்த 2012ல் இருந்து தொடர்ந்து 6 வருடங்களாக உச்சநீதிமன்றத்தில் பணியாற்றினார்.
உச்சநீதிமன்ற செயல்பாட்டில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக அண்மையில் செல்லமேஸ்வரர் போர்க்கொடி தூக்கினார். உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவிக்காலம் முடிவடைந்த பின் எந்த அரசு பணிக்கும் செல்லப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். தற்போது நீதிமன்றம் விடுமுறையில் உள்ளதால் அவருடைய கடைசி வேலை நாள் மே 18ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.