திருவாரூர்: குடிபோதையில் 2 வயது குழந்தையை தரையில் தூக்கி அடித்த தந்தை..
திருவாரூர் அருகே குடிபோதையில் 2 வயது குழந்தையை தரையில் தூக்கி அடித்து விட்டு தப்பி சென்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த வேங்கப்புரத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரின் 2 வயது மகள் அவந்திகா. குடிபோதையில் வீட்டுக்கு சென்ற வேல்முருகன் தன் மகள் அவந்திகாவை தூக்கி தரையில் அடித்து வீசி சென்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த குழந்தை தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மன்னார்குடி போலீசார், வேல்முருகனை தேடி வருகின்றனர்.