3- வது நீதிபதியாக விமலா நியமனம் : நீதிபதி குலுவாடி ரமேஷ் நியமனம் செய்தார்
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3- வது நீதிபதியாக உயர்நீதிமன்ற நீதிபதி விமலா நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில்
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி இருந்தனர். இரு நபர்கள் கொண்ட அமர்வில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கு 3-ஆவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. 3-ஆவது நீதிபதியை நியமிக்கும் பொறுப்பு மூத்த நீதிபதியான குலுவாடி ரமேஷுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் 3-ஆவது நீதிபதியாக விமலாவை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் நியமனம் செய்தார்.