விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீரை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து விட்டார்.
கேரள மாநிலம் குமுளியில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல்போக விவசாய சாகுபடிக்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீரும், குடிநீருக்காக 100 கன அடி தண்ணீரும் இன்று திறந்து விடப்பட்டது. துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தண்ணீரை திறந்து விட்டார்.
120 நாட்களுக்கு விவசாயம் மற்றும் குடிநீருக்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்று பொதுப் பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்,
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். பேபி அணையை பலப்படுத்துவது குறித்து உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்படி தமிழக அரசு செயல்படும் என்றும்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.