கபிணி அணை உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்தது

கர்நாடகாவிலிருந்து நேற்று முன்தினம் திறப்பட்ட 35 ஆயிரம் கன அடி தண்ணீர் இன்று காலை மேட்டூர் அணைக்கு வந்தது

Update: 2018-06-17 08:43 GMT
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு எதிரொலி - கபினியில் இருந்து நீர்திறப்பு ஆயிரம் கன அடியாக குறைப்பு

கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான  குடகு, சிக்மகளூரு,  மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் பெய்து மழை காரணமாக கபினி, கே.ஆர்.எஸ் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

கடந்த 15ஆம் தேதி கபினி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 37 ஆயிரம் கன அடியாக இருந்தால் அணை நிரம்பும் சூழல் காணப்பட்டது. இதனால் பாதுகாப்பு கருத்தி அணையில் இருந்து 35 ஆயிரம் கன அடி உபரிநீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததை அடுத்து,நீர்திறப்பு
15 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு மழை அளவு மேலும் குறைந்த நிலையில், தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.


ஓகேனக்கல் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

கர்நாடகா மாநிலம் கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் தமிழகம் வந்ததை அடுத்து ஓகேனக்கல் அருவியி்ல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 

கபிணி அணை உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்தது

கர்நாடகாவிலிருந்து நேற்று முன்தினம் திறப்பட்ட 35 ஆயிரம் கன அடி தண்ணீர் இன்று காலை மேட்டூர் அணைக்கு வந்தது. இதே அளவில் தண்ணீர் வந்தால் டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து விரைவில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுபணித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  இதனிடையே கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அடுத்த சில தினங்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Tags:    

மேலும் செய்திகள்