இயற்கை விவசாயத்திற்கு கைகொடுக்கும் பஞ்சகவ்யா

ரசாயன பூச்சிக் கொல்லிகளுக்கு பதிலாக பஞ்சகவ்யாவை வைத்து இயற்கை விவசாயம் செய்து வரும் தம்பதியரை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

Update: 2018-06-15 14:46 GMT
ரசாயன பூச்சிக் கொல்லிகளுக்கு பதிலாக பஞ்சகவ்யாவை வைத்து இயற்கை விவசாயம் செய்து வரும் தம்பதியரை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த கருக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாய தம்பதியினர் செல்லமுத்து மற்றும் வளர்மதி. ஆரம்ப காலத்தில் ரசாயன பூச்சிக்கொல்லி தெளிக்கும் பணியில் செல்லமுத்து ஈடுபட்டு வந்துள்ளார். தினமும் பூச்சிகொல்லிகளை தெளித்து வந்ததால் சுவாசக்கோளாறு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகியுள்ளார் செல்லமுத்து. மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற போது தான் அவருக்கு பஞ்சகவ்யா அறிமுகமானது.

பசுமாட்டில் இருந்து கிடைக்கும் பொருட்களை வைத்து தயாரிக்கும் கரைசல் தான் இந்த பஞ்சகவ்யா. இதனால் மனிதனுக்கும் மண்ணுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என டாக்டர் தெரிவித்ததால் அதையே செல்லமுத்துவும் பின்பற்ற தொடங்கியுள்ளார்... மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு சோதனை செய்த செல்லமுத்து பஞ்சகவ்யா மூலம் பயிர்கள் பாதிப்பின்றி வளர்ந்து மகசூலை தருவதை உணர்ந்தார். தன்னை வழக்கமாக பூச்சிகொல்லி மருந்து அடிக்க கூப்பிடும் விவசாயிகளிடமும் இதையே பரிந்துரை செய்துள்ளார் செல்லமுத்து. மருத்துவரிடம் இருந்து பஞ்சகவ்யா தயாரிக்கும் முறையை முழுமையாக கற்றுக்கொண்ட செல்லமுத்து இதை ரசாயனத்துக்கு மாற்றாக ஒரு புரட்சி என தெரிவித்தார்.

முதலில் தான் மட்டும் பயன்படுத்திய இந்த பஞ்சகவ்யா திரவியத்தை நாளடைவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன்படுத்த காரணமாகவும் இருக்கிறார். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கும் இந்த இயற்கை முறையை கற்றுக்கொடுத்துள்ளனர் இந்த தம்பதியினர்.
செல்லமுத்து, விவசாயி) 

சிறந்த இயற்கை இடுபொருள் தயாரித்து விவசாயிகளுக்கு கொடுத்து சேவை செய்ததற்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் இருந்து சுற்றுச்சூழல் விருதையும் பாராட்டையும் பெற்றுள்ளனர் தம்பதியர். பயிர்களை பொறுத்து மூலப்பொருட்களின் அளவுகளை கூட்டியும் குறைத்தும் புதிதாக ஆராய்ச்சி செய்து இவர்கள் வெற்றி கண்டுள்ளனர். இவர்களது இந்த கண்டுபிடிப்பை கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஆய்வு செய்து பயிர்களுக்கு பயன்படுத்த அனுமதி தந்திருக்கிறார்கள். பயிர்களுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பில்லாத இயற்கை திரவங்களை அரசு ஊக்குவித்து பரிந்துரை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்