"பழங்குடியினர் நலனுக்காக மத்திய அரசு உழைக்கிறது" - பிரதமர் மோடி

பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலனுக்காக மத்திய அரசு உழைத்து வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்தார்.

Update: 2018-06-15 05:21 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாய் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிலாயில் அமைந்துள்ள  எஃக்கு தொழிற்சாலை, நவீன இந்தியா வளர்ச்சிக்கு உதவும் என்றார். நயா ராய்ப்பூர், இந்தியாவின் முதலாவது பசுமை ஸ்மார்ட் சிட்டியாக மாறியுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், இது மற்ற ஸ்மார்ட் சிட்டிகளுக்கு உதாரணமாக இருக்கும் என்றார். 

பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலனுக்காக மத்திய அரசு உழைத்து வருவதாகக் குறிப்பிட்ட மோடி, ஹவாய் செருப்பு அணிந்தவர்களும் விமானத்தில் பயணிப்பதை பார்ப்பதே எனது கனவு என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்