மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள், வெளிநாட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது - ரவீந்திரநாத் குற்றச்சாட்டு

மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்படும் உறுப்புகள், வெளிநாட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது - ரவீந்திரநாத் குற்றச்சாட்டு

Update: 2018-06-12 11:54 GMT
தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்படும் உறுப்புகள், வெளிநாட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் குற்றம்சாட்டியுள்ளார். 






உடல் உறுப்புகள் தானத்தில் எந்தவித முறைகேடுகளும் நடக்கவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 

தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் பெறப்படுவதில் எந்த வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 


உறுப்பு தானத்தில் முறைகேடுகள் : சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி 

தமிழகத்தில், உறுப்பு தானத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், விடுத்துள்ள அறிக்கையில், முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். விதிகளை மீறி உடல் உறுப்புகள் வெளிநாட்டவருக்கு பொருத்தப்பட்டதால், உள்ளூர் நோயாளிகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா? என்பது குறித்து விசாரித்து, அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்