ஜூன் 18 முதல் காவிரி உரிமை மீட்பு வெற்றி விளக்க பொதுக் கூட்டங்கள் : அதிமுக அறிவிப்பு

காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுத்த அ.தி.மு.க. அரசுககு நன்றி தெரிவிக்கும வகையில் பொதுக் கூட்டங்கள் நடத்த அந்த கட்சி திட்டமிட்டுள்ளது.

Update: 2018-06-12 11:17 GMT
காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுத்த அ.தி.மு.க. அரசுககு நன்றி தெரிவிக்கும வகையில் பொதுக் கூட்டங்கள் நடத்த அந்த கட்சி திட்டமிட்டுள்ளது. 

இதுதொடர்பாக அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில்

காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்கப் பொதுக் கூட்டம் வரும் ஜூன் 18 முதல் 24 ஆம் தேதி வரையும், ஜூலை மாதம் 11 ஆம் தேதியும் நடைபெற உள்ளதாக  தெரிவித்துள்ளார். 

இந்த கூட்டங்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புக்கு ஏற்ப பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டத்துக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்திலும் கூட்டம் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜூலை 11 ஆம் தேதி திருவாரூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர் செல்வம் பங்கேற்கிறார்.

ஜூன் 18-ல் மயிலாடுதுறையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
Tags:    

மேலும் செய்திகள்