பிரபல அரசியல் புள்ளியை ரூட் எடுக்க 2 மாதம் நோட்டம்..கருவறுக்க போட்ட ஸ்கெட்ச்.. அதிர்ச்சியில் ராகுல்

Update: 2024-10-13 07:04 GMT

#rahulgandhi #babasiddiqui

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் படுகொலை வழக்கில், கொலையாளிகள் இருவரிடம் மும்பை குற்றப்பிரிவு போலீசார் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹரியானாவை சேர்ந்த கர்னல் சிங் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தரம்ராஜ் காஷ்யப்பிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது. பாபா சித்திக்கை கொல்வதற்கு இருவரும் முன்கூட்டியே பணம் பெற்றதுடன், ஓரிருநாட்களுக்கு முன்பு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மும்பையில் கடந்த 2 மாதங்களாக தங்கி நோட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 3வது நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் உயிரிழப்பு தனக்கு அதிர்ச்சியும், வேதனையையும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். பாபா சித்திக் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளதையே இச்சம்பவம் காட்டுவதாகவும், இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்