லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சி தொடர்பான கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், திரையரங்க உரிமையாளர் சங்கம் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், சிறப்பு காட்சிக்கான 60 சதவீத டிக்கெட் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள தனியார் மாலில், இதன்படி டிக்கெட் விற்கப்படாததால், விஜய் மக்கள் இயக்கத்தினர் அங்கு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, உறுதியளித்தபடியே டிக்கெட்விற்கப்படும் என மால் நிர்வாகத்தினர் தெரிவித்ததை அடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.