``24 மணி நேரம் கெடு..'' - விஷால் செய்த ஷாக் சம்பவம்... வார்னிங்கால் பரபரப்பு

Update: 2024-08-11 07:17 GMT

தனக்கு எதிராக போடப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என விஷால் கெடு விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...இதுபற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

விஷாலுக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஏழாம்பொருத்தமாக உள்ளதை சமீப கால நிகழ்வுகளே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன...

தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் இருந்த போது சங்கத்தின் பணத்தில் முறைகேடு செய்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் விஷாலுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது...

சங்கத்தில் இருந்து முறைகேடாக செலவழித்த 12 கோடி ரூபாயைத் திரும்பத் தருமாறு பலமுறை கூறியும் விஷால் பதில் அளிக்கவில்லை என கூறி அவரது புதிய படங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன...

இந்த சூழலில்..."அப்படித்தான் தொடர்ந்து படங்களில் நடிப்பேன்..முடிந்தால் தடுத்துப் பாருங்கள்..." என்று படத்தில் வருவதைப்போலவே தயாரிப்பாளர் சங்கத்துக்கு சவால் விட்டிருந்தார் விஷால்..

இப்போது கெடுபிடி காட்டிய தயாரிப்பாளர் சங்கத்துக்கு கெடு விதித்து அதிரடி காட்டியுள்ளார் விஷால்...

அதாவது, "தன் மீது தனிப்பட்ட ரீதியில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிய தற்போதைய சங்க நிர்வாகிகள்...தன்னுடைய கடிதத்தைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் வன்மத்தினால் அனுப்பிய பத்திரிக்கை செய்தியைத் திரும்பப் பெற்று பதிலளிக்கா விட்டால் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்" என்று கவுண்ட்டவுன் ஸ்டார்ட் செய்துள்ளார்..

"என்னை வைத்துப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் ஏன் தயாரிப்பாளர் சங்கத்திடம் ஆலோசிக்க வேண்டும்?..."

"இவை விஷால் என்ற நடிகருக்கு தயாரிப்பாளர் சங்கம் விதிக்கும் மறைமுக ரெட் கார்டா?..."

என கொந்தளித்துள்ள விஷால்..

கடந்த காலங்களில் இப்படி நேரடியாகவோ..மறைமுகமாகவோ ரெட் கார்டு விதித்து...சட்டத்தின் முன் கைகட்டி நின்று...தங்கள் முடிவை அன்றைய சட்ட நிர்வாகிகள் வாபஸ் பெற்ற வரலாறு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்...

தான் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்தபோது... உறுப்பினர்களின் ஆலோசனைப்படி பல நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாகவும்.. முறைகேடு உள்ளதாக சந்தேகம் இருக்கும் பட்சத்தில், அது தொடர்பாக விளக்க கடந்த கால நிர்வாகத்திற்கு முறையான சந்தர்ப்பம் அளிக்காமல், நேரடி முடிவெடுத்து ஆதாரமற்ற பழி சுமத்துவது, காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே அறியப்படுகிறது என சாடியுள்ளார்..

விஷாலின் வன்ம அறிக்கைக்கு தயாரிப்பாளர் சங்கம் என்ன எதிர்வினையாற்றப் போகிறது என்று விஷாலைப் போலவே அனைவரும் காத்திருக்கின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்