திரையைத் தழுவ தயாரான விஜய்யின் 'தி கோட்' - கொடுத்த ஹைப்-ஐ ஈடு செய்யுமா வெங்கட் பிரபுவின் படம் ?

Update: 2024-09-04 22:56 GMT

நடிகர் விஜய்யின் தி கோட் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ரசிகர்களின் மனதில் இடம்பெறுமா? என்ற கேள்வியும், படம் ஹிட் அடிக்குமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது..


சிம்பிள் ட்வீட் மூலம் விஜய்யின் 68வது படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்த வெங்கட் பிரபு, விஜய் ரசிகர்களை அப்டேட்டுகளால் பிசியாகவே வைத்திருந்தார்.

அதிலும் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு பின்னர் வெளியாகும் திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே தனி எதிர்பார்ப்பு இருந்தது...

அதிலும் முன்னதாக வெளியான பீஸ்ட், வாரிசு, லியோ உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாக சாதனை படைத்திருந்தாலும் விமர்சன ரீதியான கருத்துகளை சந்தித்தது..

இதனால், விஜய்யின் அடுத்த படம் விமர்சன ரீதியிலும் வரவேற்பை பெற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருந்தது..

இந்த சூழலில் தான் டைம் டிராவலை மையமாக வைத்து தி கோட் திரைப்படம் உருவாகவுள்ளதாக கூறினார் வெங்கட் பிரபு..

ஏற்கனவே மாநாடு படம் மூலம் டைம் டிராவல் படத்தை எடுத்து வெங்கட் பிரபு வெற்றிக் கண்டுள்ளதால், ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு கூடியது..

சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தயாரான தி கோட் திரைப்படத்தில், டி-ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் இளம் வயது தோற்றம், வயதான தோற்றம் என வித்தியாசமான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு..

இது மட்டுமன்றி, படத்தில் சினேகா, லைலா, பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, மோகன், பிரேம்ஜி, உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமும் இணைந்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியது..

ஆனால் தி கோட் பட பாடல்களில் சறுக்கலை சந்தித்ததோடு, விஜய்யின் டி-ஏஜிங் தோற்றம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது..

இவற்றையெல்லாம் கடந்து படத்தில் நிறைய சஸ்பென்ஸ் காட்சிகள் இருப்பதாக கூறி படக்குழு ஹைப் ஏற்றி வர, பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்...

இந்த நிலையில் தான் படத்தின் சிறப்புக்காட்சியில் சிக்கல் நீடித்து வந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்த நிலையில், சிறப்புக்காட்சிக்கு அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோட் வெளியாகும் முதல் நாளில், காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதியளித்துள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் பதிவிட்டிருந்தார் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி..

மற்றொரு புறம் தி கோட் படத்திற்கான டிக்கெட்டுகள் பெறுவதில், சிரமம் ஏற்பட்டுள்ளதாக புலம்பி வருகின்றனர் ரசிகர்கள்..

இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டும் வகையில், ரிலீஸ் ப்ரோமோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது படக்குழு....

அத்துடன் தி கோட் படத்தில் விஜய்யுடன் பைக்கில் அமர்ந்திருப்பதை போன்று ஃபோட்டோ எடிட் செய்யும் ஏஐ இணையத்தளத்தை வெளியிட்டுள்ளது படக்குழு...

இப்படி அடுக்கடுக்காக கொடுத்த ஹைப்க்கு ஈடு செய்யுமா தி கோட் திரைப்படம் என எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்...

Tags:    

மேலும் செய்திகள்