சூரரை போற்று' படத்தின் ரீமேக்காக உருவான 'சர்ஃபிரா'

Update: 2024-06-18 17:28 GMT

தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான 'சூரரை போற்று' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தின் இந்தி ரீமேக்கை 'சர்ஃபிரா' என்ற தலைப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சூர்யா தயாரித்துள்ள இந்த படத்தில் அக்‌ஷய் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகர்கள் சூர்யா, சரத்குமார் ஆகியோர் 'சர்ஃபிரா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் ஜூலை 12-ஆம் தேதி வெளியாகும் 'சர்ஃபிரா' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்