ரகசிய திருமணம் செய்து கொண்ட சித்தார்த் - அதிதி ராவ் | siddharth aditi wedding

Update: 2024-09-16 10:35 GMT

நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஜோடி தெலங்கானாவில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பட விழாக்களிலும், சமூக வலைத்தளத்தில் ஜோடியாக தென்பட்டு வந்த நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதரி அண்மையில் தங்கள் நிச்சயதார்த்தம் குறித்து அறிவித்திருந்தனர். இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இருவரின் திருமண புகைப்படமும் வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வனர்பதி கோயிலில் திருமணம் நடந்ததாக கூறப்படும் நிலையில், திருமண புகைப்படங்கள் இணையத்தை பரவி வருகிறது... இவர்களின் திருமணத்திற்கு பலரும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்