"பாதிப்புகளில் இருந்து மீண்டு வருகிறேன்...வேதனைப்படுத்த வேண்டாம்" - நடிகை பாவனா உருக்கம்

Update: 2022-09-27 03:06 GMT

"பாதிப்புகளில் இருந்து மீண்டு வருகிறேன்...வேதனைப்படுத்த வேண்டாம்" - நடிகை பாவனா உருக்கம்

தனது பாதிப்புகளிலிருந்து மீண்டு வரும் போது தம்மை வேதனைப்படுத்த வேண்டாம் என, நடிகை பாவனா தெரிவித்துள்ளார். கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை பாவனா,

தனக்கு அமீரகத்திலிருந்து கோல்டன் விசா வழங்கப்பட்டதாக சமூக வலைத்தள பக்கத்தில் தகவல் பகிர்ந்திருந்தார். அத்துடன் அவர் பகிர்ந்த புகைப்படத்தில்அவர்

அணிந்திருந்த ஆடை தொடர்பாக சமூக ஊடகங்களில் கடும் வமர்சனம் எழுந்தது. இந்நிலையில், நடிகை பாவனா, சமூக வலைத்தள பக்கத்தில், தமக்கு நிகழ்ந்த

பாதிப்புகளிலிருந்து, மீள தமக்கு தாமே ஆறுதல் கூறி வாழ்க்கையை நகர்த்தி வருவதாக கூறியுள்ளார். இதனால் மீண்டும் வேதனைப்படுத்த வேண்டாம் என

குறிப்பிட்டுள்ளார். அவரது வேதனை கலந்த பதிவு சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்