கிராமத்து பின்னணியுடைய படங்களை இயக்கிவரும் இயக்குநர் முத்தையா, அடுத்ததாக தனது மகன் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் பரத் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே செல்லமே, கடுகு, ஸ்பைடர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ள பரத், மீண்டும் நான்காவது முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.