அனிருத் உடன் திருமணமா? நடக்கும், ஆனால்... கீர்த்தி சுரேஷ் நச்சுனு பதில் | Anirudh | Keerthy Suresh
இசையமைப்பாளர் அனிருத்தும், நடிகை கீர்த்தி சுரேஷும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், வட இந்திய ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்த நிலையில், இந்த தகவலை கீர்த்தி சுரேஷ் மறுத்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள கீர்த்தி சுரேஷ், இந்த செய்தி தவறானது என்றும், அனிருத் தனக்கு நல்ல நண்பர் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு, கண்டிப்பாக தனக்கு திருமணம் நடக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.