"மன்சூர் அலிகான் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" - இயக்குநர் பாரதிராஜா..
நடிகர் மன்சூர் அலிகான் விவகாரம் குறித்து, தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் ப்ரொடியூசர்ஸ் அசோசியேஷன் சார்பில் இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மன்சூர் அலிகான் அளித்த பேட்டியில், வரம்புமீறி சக நடிகை பற்றி அவதூறாக பேசியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணாக த்ரிஷா குரல் எழுப்பியுள்ள நிலையில், அவரிடம் மன்னிப்பு கேட்காதது முறையற்ற செயல் என்றும் தெரிவித்துள்ளார். பெண்களைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ள பாரதிராஜா, மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே சிறந்த செயல் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.