'ஜெயிலர்' விவகாரம்... "குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள்.."- பரபரப்பு புகார்
சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில், வழக்கறிஞர் தேவநாதன் அளித்துள்ள புகாரில், வரும் 10ஆம் தேதி ரிலீசாகும் ஜெயிலர் படத்தை அரசு நிர்ணயித்த 4 காட்சிகளை தாண்டி 6 காட்சிகள் வெளியிடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். ஒரு டிக்கெட்டை 1,500 ரூபாய் வரை விற்பனை செய்து திரையரங்கு உரிமையாளர்கள் கொள்ளையடிப்பதாக மனுவில் புகார் அளித்துள்ளார். துணிவு பட ரிலீஸ் கொண்டாட்டத்தின் போது ரசிகர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டிய அவர், நள்ளிரவு காட்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். மேலும், கூடுதல் காட்சி மற்றும் கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிப்போர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தேவராஜன் வலியுறுத்தியுள்ளார்.