உள்ளூர் கலாச்சாரம், மொழி ஆகியவற்றை கொண்டே, தான் திரைப்படங்களை உருவாக்குவதாக இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
கோவாவில் 54-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விடுதலை திரைப்படக்குழுவினர், ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடினர். அப்போது பேசிய படத்தின் இயக்குனர் வெற்றிமாறன், உள்ளூர் கலாச்சாரம், மொழி, நிலம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே, தான் திரைப்படங்களை உருவாக்குவதாக கூறினார். நடிகர் சூரியின் உண்மையான ஆளுமை, குமரேசன் கதாபாத்திரத்துடன் ஒன்றிணைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். கலந்துரையாடலில் பேசிய நடிகர் சூரி, 160 படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்த நிலையில், கதாநாயகனாக நடித்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.