நயன்தாரா பட இயக்குனர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ | Gopi Nainar

Update: 2024-06-29 06:55 GMT

நயன்தாரா பட இயக்குனர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் தனது கிராமத்தின் ஏரியை பாதுகாக்குமாறு முதல்வருக்கு கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். எண்ணூர் துறைமுகத்தை - தச்சூர் கூட்டு சாலையுடன் இணைக்கும் வெளிவட்ட சாலைக்காக, அருகில் உள்ள ஏரிகளில் மண் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ள காட்டூர் கிராமத்தில் பாசன ஏரியில் மண் அள்ள உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால், பாசன வசதி பாதிக்கப்படும் என அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை இல்லை என குறிப்பிட்டுள்ள கோபி நயினார், மண் அள்ளும் உத்தரவை முதல்வர் ஸ்டாலின் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்