பாஜக பிரமுகர் மீதான நடிகை கவுதமி வழக்கு ... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நடிகை கவுதமி அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பாஜக பிரமுகர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நடிகை கவுதமி, கடந்த 2004 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, தனது பெயரில் உள்ள சொத்தை விற்பதற்காக சினிமா தயாரிப்பாளரும், பா.ஜ.க. பிரமுகருமான அழகப்பன் என்பவருக்கு பொது அதிகாரம் வழங்கியிருந்தார். ஆனால்,அந்த சொத்தை விற்ற அழகப்பன் பணத்தை தராமல் மோசடி செய்ததுடன், தனது வங்கிக் கணக்கில் இருந்த கோடிக்கணக்கான ரூபாயை அவருடைய மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் பெயருக்கு மாற்றி, கையாடல் செய்ததாக கவுதமி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், அழகப்பன், அவருடைய மனைவி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த மத்திய குற்ற்ப்பிரிவு போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்தவழக்கில் தங்களுக்கு ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அழகப்பன் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.