'பீஸ்ட்' வெற்றிக் கொண்டாட்டம் : படக்குழுவினருக்கு வீட்டில் விருந்து வைத்த விஜய்

பீஸ்ட் திரைப்பட குழுவினருக்கு நடிகர் விஜய் தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார்.

Update: 2022-04-26 05:26 GMT
பீஸ்ட் திரைப்பட குழுவினருக்கு நடிகர் விஜய் தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், கதாநாயகி பூஜா ஹெக்டே உள்ளிட்ட படக்குழுவினருக்கு நடிகர் விஜய் தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, மறக்க முடியாத தருணம் என இயக்குநர் நெல்சன் தனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்