சம்பள பாக்கி விவகாரம்: சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நடிகர் சிவகார்த்திகேயன், மிஸ்டர் லோக்கல் பட சம்பள பாக்கி கோரிய வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன், மிஸ்டர் லோக்கல் பட சம்பள பாக்கி கோரிய வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்ததற்கான சம்பளம், 4 கோடியே 80 லட்சம் ரூபாய் பாக்கி உள்ளதாகவும், அதை வழங்குமாறு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடக் கோரியும், நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்தார். சம்பள பாக்கி வரும் வரை, ஞானவேல்ராஜா தயாரித்துள்ள பத்துதலை, சீயான் 61, ரிபெல் படங்களை வெளியிட தடை விதிக்கவும் கோரினார். இதற்கு ஞானவேல்ராஜா தாக்கல் செய்த பதில் மனுவில், உண்மையை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளதாக குற்றம்சாட்டினார். மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நட்டம், விநியோகஸ்தர்கள் பிரச்சனை குறித்த தகவலை சிவகார்த்திகேயன் மறைத்து மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அதை அபராதத்துடன் தள்ளுபடி செய்யுமாறும் கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், சம்பள பாக்கி தொடர்பாக சமரச தீர்வாளரை நியமித்தார். ஞானவேல் ராஜா படங்களுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் கூறி, வழக்கை முடித்து வைத்தார்.