"எஸ்.பி.பி. பெயரில் விருது, சிலை - தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு" - எஸ்.பி.பி. சரண்

மறைந்த எஸ்.பி. பாலசுப்பரமணியம் பெயரில் தமிழக அரசு விருது வழங்கவோ அல்லது சிலையை நிறுவவோ முன்வந்தாலோ, முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-10 11:30 GMT
மறைந்த எஸ்.பி. பாலசுப்பரமணியம் பெயரில் தமிழக அரசு விருது வழங்கவோ அல்லது சிலையை நிறுவவோ முன்வந்தாலோ, முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள ஆந்திர சமூக மற்றும் கலை சங்க அரங்கத்தில், மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் குறித்து, ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கங்கை அமரன் மற்றும் பல்வேறு திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்கள், குடும்பத்தினரால் பாடப்பட்டு, அவர் குறித்த நினைவுகள் ரசிகர்களுடன் பகிரப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்