சல்மான் கானின் பாரத் படத்திற்கு சிக்கல்

சல்மான் கான் நடித்துள்ள பாரத் திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2019-05-31 01:52 GMT
சல்மான் கான் நடித்துள்ள பாரத் திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுநல வழக்கு ஒன்றில், பாரத் என்ற பெயர் வர்த்தக நோக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது அரசியல் சாசன சட்டப்படி குற்றம் என்பதால், சல்மான் கானின் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிகிறது. சல்மான் கான் நடித்துள்ள பாரத் திரைப்படம் வரும் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்