கடன் பிரச்சினையால் விஸ்வாசம் படத்தை வெளியிட தடை

கடன் பிரச்சினையால் 'விஸ்வாசம்' படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட அளவு பணத்தை இன்றே வழங்குவதாக தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Update: 2019-01-09 07:23 GMT
கடன் பிரச்சினையால் 'விஸ்வாசம்' படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட அளவு பணத்தை இன்றே வழங்குவதாக தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

கடன் பிரச்சினை காரணமாக, 'விஸ்வாசம்' படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சினிமா பைனான்சியர் உமாபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் விஸ்வாசம் படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதையடுத்து நீதிமன்றம் விதித்த தடையை நீக்க கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது 78 லட்ச ரூபாய் கடன் பாக்கியில் 35 லட்ச ரூபாயை இன்றே வழங்குவதாகவும், மீதி தொகையை 4 நாட்களில் வழங்க உத்தரவாதம் அளிப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இதை மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்