நடிகை ஸ்ரீதேவிக்கு இன்று பிறந்த நாள்
தெற்கில் இருந்து வடக்கே சென்று, லேடி சூப்பர் ஸ்டாராக பரிணமித்த ஸ்ரீதேவிக்கு இன்று பிறந்த நாள்.
* தெற்கில் இருந்து வடக்கே சென்று, லேடி சூப்பர் ஸ்டாராக பரிணமித்த ஸ்ரீதேவியின், பிறந்த தினம் இன்று பாலிவுட்டில் 'ஜூலி' என்ற திரைப்படம் மூலம் 1975ம் ஆண்டிலேயே அறிமுகமாகவிட்டார் ஸ்ரீதேவி.
* பன்முக திறமை கொண்ட அவர், மூன்றாம் பிறை ரீமேக் திரைப்படமான சத்மா -வில், தமது சொந்த குரலில் முதல் முறையாக, இந்தியில் வசனம் பேசினார்.
* ஸ்ரீதேவியின் வாழ்க்கையில் மிக முக்கியமான இரண்டு திரைப்படங்களில் நடிக்க அவர் முதலில் தேர்வு செய்யப்படவில்லை. நாகினா என்ற படத்திற்கு ஜெயபிரதாவும், சாந்தினி திரைப்படத்திற்கு ரேகாவும் முதலில் அணுகப்பட்டனர். அவர்கள் மறுத்ததால், அந்த வாய்ப்புகள் ஸ்ரீதேவிக்கு கிடைத்தன.
* இந்தி திரைப்படத்தில், ஆதிக்கம் செலுத்தி வந்த ஜித்தேந்திரா, அமிதாப் பச்சன் போன்ற சூப்பர் ஸ்டார்களையும் தாண்டி ஸ்ரீதேவி கொடி நாட்டியது அப்போது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. ஜெயப்பிரதா, ரேகா என சக நடிகைகளின் கடும் போட்டியையும் தாண்டி, தமது தனி ஸ்டைலால் ஒட்டுமொத்த வட இந்திய ரசிகர்களையும் கட்டிப் போட்டு வைத்திருந்தார் ஸ்ரீதேவி.
* 1978ம் ஆண்டு சொல்வா சவான் என்ற திரைப்படம் மூலம் இந்தியில் கதாநாயகியானார் ஸ்ரீதேவி. 1983-ல் வெளியான 'ஹிம்மத்வாலா' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில், அவர் மிகவும் பிரபலம் அடைந்தார்.
* தொடர்ந்து, மிஸ்டர் இந்தியா, மாவாலி, டோபா, சாந்தினி போன்ற படங்களால் இந்தி ரசிகர்களை கவர்ந்தார்... இவை, மிகப் பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களாகும்.
* சால் பாஸ், லம்ஹே, கும்ரா போன்றவை அவரது நடிப்பால் பேசப்பட்டவை. கடைசியாக, அவர் இந்தியில் நடித்த படம் ''மாம்''... கடந்த ஆண்டு வெளியானது.
* தனது சொந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ஸ்ரீதேவி நடித்த 'மாம்' திரைப்படம் அவரது நடிப்பில் வெளிவந்த 300-வது திரைப்படமாகும்.
* வட இந்தியாவுக்குப் போய் வெற்றிக் கொடி நாட்டிய தோடு, அங்குள்ள சூப்பர் ஸ்டார்களையும் தாண்டி புகழ் பெற்றது என்று பார்த்தால் அது, நடிகை ஸ்ரீதேவி மட்டும் தான்.